யேமனில் இடம்பெறும் மோதல்களினால் அதிகளவான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவுகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளிலும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. ஒருசில பகுதிகளில் உள்நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணமாகும். நிவாரண நடவடிக்கைகளுக்கென உரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு மோதல்களுடன் தொடர்புடைய தரப்பினரிடம் சர்வதேச உணவு அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment