Daily NEWS Srilanka

Srilankans' Daily News Provider

Popular News

Archives

குறைக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் நாளை முதல் அமுலில்  

Add comments

குறைக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதுகுறித்து அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் எல்.மல்சி டி சில்வா தெரிவித்துள்ளார். அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் நூற்றுக்கு 3 வீதத்தால் கட்டண குறைப்பை மேற்கொள்ள இணக்கம் எட்டப்பட்டது. எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் நன்மையை மக்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும்.

0 comments

Post a Comment

Recent News

Gossip Lanka MAG